புதியதாக 15 சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

0 1909

டெல்லியில் புதியதாக 15 சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், நாளுக்கு நாள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட்வர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது.

இந்நிலையில்,  டெல்லியில் ஒரு உதவி ஆய்வாளர், 4 தலைமை காவலர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உட்பட, மொத்தம் 15 பேருக்கு மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments