ஊரடங்கில் சிறார் ஆபாச படங்கள் பார்ப்பது 95 சதவீதம் அதிகரிப்பு என ஆய்வில் தகவல்

0 11706

ஊரடங்கு காலத்தில் சிறார் ஆபாச படங்களை பார்ப்பது 95 சதவீதம் அளவிற்கு உயர்ந்திருப்பது தொடர்பாக கூகுள், வாட்ஸ்-அப் நிறுவனங்களுக்கு, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

கொரோனா முன்னெச்சரிக்கையாக நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, ஆபாச படங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சில செயலிகள் மூலம் குழந்தைகளுக்கு எதிரான ஆபாசப் பொருட்கள் அணுகப்படுவது தொடர்பாக கூகுள் நிறுவனத்திற்கு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும், என்கிரிப்டட் வாட்ஸ்-அப் குரூப்களிலும் இது போன்ற பொருட்கள் கிடைப்பதாகவும், இதுபோன்ற குரூப்களில் இணைவதற்கான லிங்குகள் ட்விட்டரில் பகிரப்படுவதை அனுமதிப்பது தொடர்பாகவும் பதிலளிக்குமாறு, வாட்ஸ்-அப் மற்றும் ட்விட்டருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments