போயிங்- எம்பரேர் வர்த்தக விமான ஒப்பந்தம் ரத்து ஆகிறது
பிரேசிலின் எம்பரேர் (Embraer)வர்த்தக விமானப் போக்குவரத்து நிறுவனத்துடன் மேற்கொண்ட 4 புள்ளி 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை திரும்பப்பெறுவதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இரு நிறுவனங்களும் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி போயிங் நிறுவனம் 80 சதவீதப் பங்குகளை எடுத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஒப்பந்தத்தைத் திரும்பப்பெறும் உரிமையை போயிங் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. தேவையான விதிமுறைகளை எம்பரேர் நிறுவனம் நிறைவேற்றவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளாக பல்வேறு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை என்று போயிங் நிறுவனத்தின் சார்பில் இத்திட்டத்தை செயல்படுத்திய திட்ட அதிகாரி மார்க் ஆலன் தெரிவித்துள்ளார்.
Comments