காலை வாரினாலும்.. கலங்காத விஜய்..! மாஸ்டர் ரிலீஸ் எப்போது ?
200 கோடி ரூபாய்க்கு மேல் படவெளியீட்டுக்கு முன்னரே விற்கப்பட்ட மாஸ்டர் படத்தை மினிமம் கியாரண்டி அடிப்படையில் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் மறுத்த நிலையில் டிஸ்ட்ரிபுயூசன் அடிப்படையில் வெளியிட கலங்காமல் முடிவெடுத்த நடிகர் விஜய்யின் தன்னம்பிக்கை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
விஜய்யின் மாஸ்டர்.... இந்த படம் தயாரிப்பில் இருந்த போதே வெளி நாட்டு வெளியீட்டு உரிமை, உள்ளூர் திரையரங்கு வெளியீட்டு உரிமை உள்ளிட்ட அனைத்து ஏரியாக்களும், டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமைகளும் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விற்றுத்தீர்ந்ததாக கூறப்பட்டது.
மாஸ்டர் படம் அனைத்து பணிகளும் முடிந்து திரைக்கு வர தயாராக இருந்த நிலையில், கொரோனா பரவலை தடுக்க போடப்பட்ட ஊரடங்கால் திரையரங்குகள் அனைத்தும் பூட்டப்பட்டுவிட்டதால் வெளியிட இயலாத நிலை ஏற்பட்டது. வெளி நாட்டு வெளியீட்டு உரிமையை 35 கோடி ரூபாய்க்கு பெற்ற வினியோகஸ்தர், உலக நாடுகளில் ஊரடங்கு முழுமையாக தளர்வு பெற்ற பின்னரே மாஸ்டர் படத்தை வெளியிட வேண்டும் என்று நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த இக்கட்டான நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மாஸ்டர் படத்தை 85 கோடி ரூபாய்க்கு விலைக்கு பெற்ற தமிழக விநியோகஸ்தர்கள், படத்தை மினிமம் கியாரண்டி அடிப்படையில் வெளியிட முடியாது என்று மொத்தமாக காலை வாறினர். இதையடுத்து டிஸ்ட்ரிபியூசன் முறையில் வெளியிட்டுக் கொள்ளுங்கள் என்றும் தயாரிப்பாளருக்கு இழப்பு ஏற்பட்டால் அடுத்த படத்தில் சரி செய்வதாக கலங்காமல் முடிவெடுத்து தயாரிப்பாளருக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார் படத்தின் நாயகன் விஜய்..!
பொதுவாக திரையரங்குகளில் படங்கள் 3 ஒப்பந்த முறைகளில் வெளியிடப்படுகின்றது. ரஜினி. அஜீத். விஜய் படங்கள் மினிமம் கியாரண்டி முறையிலும், பெரும்பாலான படங்கள் டிஸ்ட்ரிபியூசன் முறையிலும், ஒரு சில படங்கள் அவுட்ரேட் முறையிலும் வெளியிடப்படுகின்றது.
மினிமம் கியாரண்டி என்பது விநியோகஸ்தர்கள் படத்தை பார்க்காமல் முன்கூட்டியே படத்தை தயாரிப்பாளர்களிடம் குறிப்பிட்ட விலைக்கு வாங்கி திரையரங்குகளில் வெளியிடுவார்கள், நட்டம் விநியோகஸ்தர்களை சார்ந்தது, லாபம் வந்தால் தயாரிப்பாளர்களுக்கு பங்கு கொடுக்க வேண்டும். இந்த முறையில் ரஜினி, விஜய், அஜீத் போன்றவர்களின் படங்கள் மட்டுமே விற்கப்படும்.
டிஸ்ட்ரிபியூசன் முறையில் நட்டம் லாபம் இரண்டுமே தயாரிப்பாளர்களை சார்ந்தது. பணம் கொடுத்து வாங்கும் விநியோகஸ்தர்களுக்கு நட்டம் என்றால் பணத்தை தயாரிப்பாளர் திருப்பி கொடுக்க வேண்டும். இது பெரும்பாலும் சாதாரண நடிகர்களின் படத்திற்கு கடைபிடிக்கப்படும் வணிகமுறை என்றாலும் ஸ்டார் அந்தஸ்திற்கு உயர்ந்த பின்னர் விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு இந்த வணிகமுறையை கையில் எடுத்திருப்பது இதுவே முதல்முறை..!
விஜய் படத்தை காண அவரது ரசிகர்கள் எவ்வளவு விலை கொடுக்கவும் தயாராக உள்ள நிலையில், படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் எகிறி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் செயல்படுவதற்கான கட்டுப்பாடுகள் தளர்ந்து முழுமையாக செயல்பட்டிற்கு வர 2 மாதங்கள் ஆகும் என்ற நிலையில், கட்டுப்பாடுகள் தளர்ந்து திரையரங்குகளில் முழுமையாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் நேரத்தில் தான் மாஸ்டர் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். அப்படியானால் குறைந்த பட்சம் மாஸ்டர் படம் வெளியாக 3 மாதங்கள் வரை ஆகலாம் என்று கூறப்படுகின்றது.
தமிழ் திரையுலகை பொறுத்தவரை, மாஸ்டர், சூரரை போற்று படங்கள் வெளியீட்டிலும், அஜீத்தின் வலிமை, ரஜினியின் அண்ணாத்த உள்ளிட்ட ஏராளமான படங்கள் தயாரிப்பிலும் அடுத்தடுத்த சவால்களை எதிர்கொண்டு வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் சாமானிய மக்களை போல காத்திருக்கின்றன..!
Comments