உலகப் புகழ்பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ரத்து

0 5157
உலகப் புகழ்பெற்ற சித்திரைப் பெருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற சித்திரைப் பெருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சித்திரைப் பெருவிழாவில் கள்ளழகர் மதுரைக்குச் சென்று திரும்ப இயலாத சூழ்நிலை உள்ளதாக   கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளழகர் மண்டூக மகரிசிக்கு மோட்சம் அளித்தல், புராணம் வாசித்தல் நிகழ்ச்சிகள் மட்டும் அழகர்கோவில் கள்ளழகர் கோவில் உட்பிரகாரத்தில் நடத்தப்படும். அனைத்துப் பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நிகழ்ச்சிகள் மட்டும் அழகர்கோவில் உட்பிரகாரத்தில் நடத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்றும், www.tnhrce.gov.in என்ற இணையத்தளம், youtube மற்றும் முகநூல் மூலமாகவும் நிகழ்ச்சிகளை நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments