ஊரடங்கு உரிய சமயத்தில் அறிவிக்காமல் இருந்திருந்தால் கொரோனா தொற்று எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்திருக்கும்

0 3978
கொரோனா தடுப்புக்காக பிரதமர் மோடி கடந்த 25 ஆம் தேதி முதல் ஊரடங்கை அறிவிக்காமல் இருந்திருந்தால் தொற்று எண்ணிக்கை இப்போது 2 லட்சத்தை தாண்டி சென்றிருக்கும் என கணக்குகள் தெரிவிக்கின்றன.

கொரோனா தடுப்புக்காக பிரதமர் மோடி கடந்த 25 ஆம் தேதி முதல் ஊரடங்கை அறிவிக்காமல் இருந்திருந்தால் தொற்று எண்ணிக்கை இப்போது 2 லட்சத்தை தாண்டி சென்றிருக்கும் என கணக்குகள் தெரிவிக்கின்றன. 

கடந்த மாதம் 24 ஆம் தேதி நிலவரப்படி தினசரி தொற்று பரவல் 21.6 சதவிகிதமாக இருந்தது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டு தனி நபர் இடைவெளியை மக்கள் பின்பற்றியதால் தினசரி தொற்று பரவல் இப்போது 8.1 சதவிகிதமாக குறைந்து விட்டதை புள்ளி விவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

அதே சமயம் கேரளம் போன்ற மாநிலங்களில் தொற்று விகிதம் 1.8 சதவீதமாக குறைந்துள்ள நிலையில், தேசிய சராசரியை ஒரு மாதத்திற்குள் 6 சதவிகிதத்திற்குள் கொண்டு வந்து விட்டால் மொத்தம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேருக்கும், 5 சதவிகிதமாக குறைத்தால் ஒரு லட்சத்திற்குள்ளாகவும் தொற்று எண்ணிக்கையை நிறுத்தி விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments