"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
2019 ல் சுந்தர் பிச்சையின் மொத்த வருமானமாக ரூ.2,135.6 கோடி வழங்கப்பட்டது
தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு அனைத்து பலன்களையும் உள்ளடக்கி கடந்த ஆண்டு ஒட்டு மொத்த ஊதியமாக 2,135 கோடி ரூபாய் வழங்கப்பட்டது என ஆல்ஃபபெட் (Alphabet) நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் பெரும் பகுதி நிறுவனத்தின் பங்குகளாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ரொக்க சம்பளம் என்று பார்த்தால் 2019 ல் அவருக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் டாலர்கள் வழங்கப்பட்டதாகவும், இந்த ஆண்டு அதை 20 லட்சம் டாலர்களாக உயர்த்த முடிவு செய்துள்ளதாகவும் ஆல்ஃபபெட் கூறியுள்ளது.
நிறுவனத்தின் நடுத்தர ஊழியர்களின் மொத்த சம்பளத்தை விட சுந்தர் பிச்சையின் சம்பளம் 1085 மடங்கு அதிகம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா காலகட்டம் மற்றும் பொருளாதார மந்த நிலையில் நிறுவனத்தை நடத்திச் செல்லும் சவால் சுந்தர்பிச்சை முன் உள்ளது.
Comments