கொரோனா தாக்கி மீண்டவர்களை மறுமுறையும் வைரஸ் தாக்கக் கூடும் என WHO எச்சரிக்கை
ஒரு முறை கொரோனா தாக்கி மீண்டவர்களை மறுமுறை அந்த வைரஸ் தாக்காது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒருமுறை கொரோனா தாக்கி அதிலிருந்து மீண்டவர்களுக்கு உடலில் வைரஸ் எதிர்ப்பு ஆன்ட்டிபாடிகள் இருக்கும் என்றும், அத்தகைய நபர்கள் நோய் பரப்பும் ஆபத்தற்றவர்கள் என சான்றிதழ் அளித்து பயணம் செய்வதற்கோ பணி புரிவதற்கோ அனுமதிக்கலாம் என்றும் சில நாடுகள் கருத்து தெரிவித்திருந்தன.
இதுபோன்ற செயல்கள் பொது சுகாதார விதிமீறல் என்பதோடு, நோய் பரப்பும் அபாயத்தை அதிகரிக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஒருமுறை கொரோனா தாக்கி மீண்டவர்களை மீண்டும் வைரஸ் தாக்கலாம் என்று தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், இரண்டாவது முறை வைரஸ் தாக்காத வகையில் உடலில் ஆன்ட்டிபாடிகள் இருக்கும் என்பதற்கு எவ்வித அறிவியல் ஆதாரங்களும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.
There is currently no evidence that people who have recovered from #COVID19 and have antibodies are protected from a second infection.https://t.co/8mWyjBILIS#coronavirus pic.twitter.com/aoWfTKBReJ
— World Health Organization (WHO) (@WHO) April 25, 2020
Comments