"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
ஸ்பெயினில் கொரோனா அதிகம் பரவ என்ன காரணம் என்பது குறித்து ஆய்வு
ஸ்பெயின் நாடு கொரோனா நோயால் அதிகம் பாதிக்கப்படுவதற்கு, சமூகவாழ்க்கை முறை உள்ளிட்டவையே காரணமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 3 நாடுகளில் ஸ்பெயினும் ஒன்றாக திகழ்கிறது. அந்நாட்டில் இதுவரை 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதுடன் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
பரஸ்பரம் கட்டித் தழுவுதல், முத்தமிடுதல் போன்ற சமூகவாழ்க்கை முறை, குடும்பத்திலுள்ள மூத்தோர், இளம்தலைமுறையினர் இடையே நிலவும் அதிக நெருக்கம், பிப்ரவரி மாத கடைசியிலும், மார்ச் மாத தொடக்கத்திலும் நிலவிய வழக்கத்துக்கு மாறான வெப்பநிலை, நிலையற்ற சுகாதார அமைப்பு, நோயின் தீவிரத்தை தாமதமாக புரிந்து கொண்டது உள்ளிட்டவையே ஸ்பெயினில் இந்த நோய் அதிகம் பரவ காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
Comments