தமிழக மக்கள் மீது கடன் சுமை : மு.க. ஸ்டாலின் அறிக்கை
மக்கள் மீது கடனை சுமத்தி விட்டு, நிதிப்பகிர்வில் உரிமையை தமிழக அரசு இழந்து நிற்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
கொரோனா விவகாரத்தில் திமுக அரசியல் ஆதாயம் தேடுவதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டிருந்த கருத்துக்கு , அறிக்கை யொன்றில் பதில் அளித்துள்ள அவர், பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றாற் போல் கடன் உயருவதாக ஓ. பன்னீர் செல்வம் கூறியிருந்ததை சுட்டிக்காட்டி உள்ளார்.
இதே அளவு கோலின் அடிப்படையில் மத்திய அரசின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாநிலங்களுக்கும் வரி வருவாயில் நிதிப்பகிர்வு அமைந்திட வேண்டும் என கூற ஏன், ஓபிஎஸ்சுக்கு துணிச்சல் இல்லை ? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழகத்தின் நிதி உரிமை, நதி நீர் உரிமை மற்றும் கல்வி உரிமை என மாநிலத்தின் எந்த உரிமையாக இருந்தாலும், அதற்காக திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Comments