அமெரிக்காவில் திடீரெனப் பயங்கரச் சூறாவளி தாக்கியதில் 6 பேர் உயிரிழப்பு

0 9893
அமெரிக்காவின் டெக்சாஸ், ஓக்லகாமா மாநிலங்களில் பயங்கரச் சூறாவளிக் காற்றால் குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ், ஓக்லகாமா மாநிலங்களில் பயங்கரச் சூறாவளிக் காற்றால் குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஓனலாஸ்கா என்னுமிடத்தில் திடீரெனப் பயங்கரச் சூறாவளி வீசியது. இதில் அலைக்கழிக்கப்பட்ட ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்தன.

ஒரு சில இடங்களில் கூரைத்தகடுகளையும் பெயர்த்தெறிந்தது. இந்தச் சூறாவளியில் 3 பேர் உயிரிழந்தனர். குறைந்தது இருபது பேர் காயமடைந்தனர்.

இதேபோல் ஓக்லகாமா மாநிலத்தில் இருவரும், லூசியானாவில் ஒரு பெண்ணும் சூறாவளியால் உயிரிழந்ததாக உள்ளூர்ச் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சூறாவளியால் மின் கட்டமைப்புகள் சேதமடைந்ததில் டெக்சாசில் ஒன்பதாயிரம் பேரும், ஓக்லகாமாவில் ஏழாயிரம் பேரும் மின்துண்டிப்பால் பாதிக்கப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments