ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்யாதோரை டெல்லிக்குள் விட வேண்டாம்
செல்போன்களில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்யாதோரை டெல்லிக்குள் விட வேண்டாமென்று துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலிடம் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் பரிந்துரைத்துள்ளது.
கொரோனா நபர்கள் இருக்கும் இடம் குறித்து அறிவது உள்ளிட்டவற்றுக்காக மத்திய அரசால் அந்த செயலி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. அந்த செயலியை பதிவிறக்கம் செய்தால், கொரோனா பாதிப்பு நபர்கள் நாம் இருக்கும் பகுதியில் அருகில் இருக்கிறார்களா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
இந்நிலையில் டெல்லியில் நோய் பாதிப்பை கட்டுப்படுத்துவது குறித்து மூத்த அதிகாரிகளுடன் அனில் பைஜால் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது அவரிடம், தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய இயக்குநர் சுர்ஜித் குமார் சிங் (National Centre for Disease Control director Surjit Kumar Singh), ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்யாதோரை டெல்லிக்குள் அனுமதிக்க வேண்டாமென பரிந்துரை செய்துள்ளார்.
அந்த பரிந்துரை மீது டெல்லி அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
Comments