கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் கூட்டாக ஈடுபட வேண்டும்
கொரோனா நோய்க்கான மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் கூட்டாக ஈடுபட வேண்டும் என்று ஐ.நா. பொது செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. உயிரிழப்பை தடுத்து நிறுத்த பல்வேறு நாடுகளும் தனித்தனியே மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்த முயற்சிக்கு இதுவரை வெற்றி கிடைக்காத நிலையில், ஐ.நா. பொது செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் அளித்துள்ள பேட்டியில், இதுவரை இல்லாத மிகப்பெரிய எதிரியை உலகம் தற்போது எதிர்கொண்டுள்ளதாகவும், இதை மனதில் கொண்டு சர்வதேச அமைப்புகளும், உலக நாடுகளின் தலைவர்களும், தனியார் துறையினரும் கூட்டாக இணைந்து மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றார்.
Comments