நாடு முழுவதும் கல்வி ஆண்டை செப்டம்பர் மாதம் தொடங்க மத்திய அரசுக்கு பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை
வரும் கல்வியாண்டை ஜூலைக்குப் பதிலாக செப்டம்பரில் தொடங்கலாம் என பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரை செய்துள்ளது.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை எப்போது நடத்துவது, ஆன்லைனில் நடத்துவதா? வகுப்புகளை எப்போது தொடங்குவது? என்பது குறித்து ஆராய 7 பேர் கொண்ட 2 கமிட்டிகளை பல்கலைக்கழக மானியக் குழு உருவாக்கியது.
வரும் கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை ஜூலை மாதத்துக்கு பதில் செப்டம்பரில் தொடங்கலாம், நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ஜூன் மாதத்தில் நடத்தலாம் என்று என்று ஒரு கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.
ஒத்திவைக்கப்பட்டுள்ள செமஸ்டர் தேர்வுகளை உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தால் ஆன்லைனிலேயே நடத்திக் கொள்ளலாம் என்றும், இல்லாவிட்டால் ஊரடங்கு முடிந்த உடன், சூழலைப் பொறுத்து நேரடி எழுத்துத் தேர்வாக நடத்தலாம் என்றும் மற்றொரு கமிட்டி பரிந்துரைத்துள்ளது.
இதன் அடிப்படையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் புதிய அறிவிக்கையை 10 நாட்களில் வெளியிட உள்ளது.
Comments