ஏப்ரல் 30ந் தேதியுடன் ஓய்வு பெறும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு பணி நீட்டிப்பு

0 3790
ஏப்ரல் 30ந் தேதியுடன் ஓய்வு பெறும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு பணி நீட்டிப்பு

வரும் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள்,  மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்களுக்கு 2 மாதம் பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே 1,508 லேப் டெக்னீசியன்கள், 530 மருத்துவர்கள் மற்றும் 1,000 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 31ஆம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற்ற மருத்துவர், செவிலியர் உள்ளிட்டோருக்கு ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமனம் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரும் 30ஆம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ள மருத்துவர், செவிலியர், மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்களுக்கும் ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்றும், இதுதவிர 1,323 செவிலியர்கள், மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருவதாகவும்  முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments