மும்பை, தானே, புனே நகரங்களில் ஜூன் தொடக்கம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு ?

0 6525

மும்பை, தானே, புனே நகரங்களில் ஜூன் தொடக்கம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மகாராஷ்டிரத்தில் ஆறாயிரத்து 817 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் மும்பை, தானே, நவி மும்பை, புனே நகரங்களில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அப்பகுதிகளில் மே 3ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. ஜூன் மாதத் தொடக்கம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக மகாராஷ்டிர அரசின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மும்பையிலும் புனேயிலும் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க வேண்டிய நிலையில் ஊரடங்கைத் தளர்த்தும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments