கொரோனாவில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்

0 16111

நாட்டிலேயே கொரோனாவில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1755 ஆக இருக்கும் நிலையில், இவர்களில் 866 பேர் நோயின் தாக்கத்தில் இருந்து குணமடைந்து விட்டனர்.  குணமானவர்கள் எண்ணிக்கையில் தமிழகத்திற்கு அடுத்த இரண்டாம் இடத்தில் டெல்லி உள்ளது.

டெல்லியில் 2514 பேருக்கு தொற்று உறுதியான நிலையில்  857 பேர் அதிலிருந்து குணமடைந்து விட்டதாக சுகாதார அமைச்சக புள்ளி  விவரங்கள்  தெரிவிக்கின்றன.  நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் 6817 பேருக்கு தொற்று பரவியுள்ள மகாராஷ்டிராவில் 840 பேர் நோயின் பிடியில் இருந்து விடுபட்டுள்ளனர். தேசிய அளவில் இது மூன்றாம் இடம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments