கொரோனா பாதிப்பு... இந்தியாவில் மேலும் அதிகரிப்பு...!

0 2945

இந்தியாவில் கொரானோ தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 500ஐ தாண்டியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று நோயால் நாளுக்கு நாள் இந்தியாவில் பாதிப்பு அதிகரித்தபடி உள்ளது. நேற்று இரவு நிலவரப்படி இந்தியாவில் பாதித்தோரின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 452ஆகவும், பலி எண்ணிக்கை 724ஆகவும் இருந்தது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட புள்ளி விவரங்களில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஆயிரத்து 429 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், மேலும் 57 பேர் பலியாகி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 506ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல் பலியானோரின் எண்ணிக்கை 775ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், குஜராத் 2ம் இடத்திலும், டெல்லி 3ம் இடத்திலும் உள்ளன.

மகாராஷ்டிராவில் 6 ஆயிரத்து 817 பேருக்கு இதுவரை கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் 2 ஆயிரத்து 815 பேருக்கும், டெல்லியில் 2 ஆயிரத்து 514 பேருக்கும் இதுவரை கொரோனா தொற்று பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று நோயால் நாட்டில் பாதிக்கப்பட்டோரில் 111 பேர் வெளி நாட்டினர் ஆவார்கள். இதுதவிர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவமனைகளில் 18 ஆயிரத்து 668 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதேபோல் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு 5 ஆயிரத்து 63 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments