மகாராஷ்டிராவில் 3 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் கோதுமை, அரிசி
மகாராஷ்டிராவில் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு ரேசன் அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் கோதுமை, அரிசி வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், வேலைக்கு செல்ல முடியாமல் ஏராளமான தொழிலாளர்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால் வருமானமின்றி தவிக்கும் ஏழை குடும்பங்களுக்கு ரேசன் அட்டைகள் மூலம் அரிசி உள்ளிட்டவை பல மாநிலங்களில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் 3 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு கிலோ 8 ரூபாய்க்கு தலா 3 கிலோ கோதுமையும், கிலோ 12 ரூபாய்க்கு தலா 2 கிலோ அரிசியும் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, குறைந்த விலையில் கோதுமை, அரிசி வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
Comments