கொரோனா தண்டனை மீண்டும் ஸ்டார்ட்... சென்னை போலீஸ் அதிரடி ...!
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களை அதிகம் கொண்ட சென்னையில், வீதிகளில் வீணாக சுற்றியவர்களை பிடித்து அவர்களுக்கு மீண்டும் நூதன தண்டனைகள் கொடுக்கப்பட்டன .
தமிழகத்தில் அதிக கொரோனா நோயாளிகளை கொண்ட மாவட்டமாக சென்னை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் கொரோனா ஹாட் ஸ்பாட்டாக ராயபுரம் மாறி இருக்கின்றது.
இங்கு தடையை மீறி வீணாக ஊருக்குள் வலம் வரும் சிலரால் கொரோனா நோய் பரவல் தீவிரம் அடைந்து வருவதால் சென்னை பெரு நகர காவல்துறையினர் தடையை மீறுபவர்களை பிடித்து வினோத தண்டனைகளை மீண்டும் வழங்க தொடங்கி இருக்கின்றனர்.
வண்ணாரப்பேட்டையில் கொரோனா ஹேர்ஸ்டைலுடன் வலம் வந்த வருத்தப்படாத வாலிபர்களை மடக்கிய துணை காவல் ஆணையர் சுப்புலட்சுமி, கண்ணாடி டம்பளரும், லிட்டில் ஸ்பூன் தண்ணீரும் டாஸ்க் கொடுத்து கலங்கடித்தார்.சின்ன ஸ்பூனால் கண்ணாடி டம்ப்ளரில் உள்ள தண்ணீரை எடுத்து பருக வைத்து, சும்மா சுற்றியவர்களை படுத்திஎடுத்தனர் போலீசார்
இன்னும் சில புள்ளீங்கோக்களுக்கு சாலையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் வைக்கப்பட்ட கண்ணாடி டம்ளரில் ஸ்பூன் மூலம் தண்ணீரை நிரப்ப வைத்து பெண்டு எடுத்தனர்.இன்னும் சில கொரோனா பாய்ஸை நடு வீதியில் தோப்புக்கரணம் போட வைத்து விரட்டி விட்டனர்
ராயபுரம் ,வண்ணாரபேட்டை,பூக்கடை, மண்ணடி, எண்ணூர் மாதாவரம் உள்ளிட்ட பகுதிகளில் ஊர் சுற்றி சிக்கியவர்கள் ஒற்றைக்காலில் தவம் செய்யும் நிலை ஏற்பட்டதுஇன்னும் சிலர் கையை நீட்டியபடி வெளியே வரமாட்டோம் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்
ஊருக்கு அடங்காமல் வலம் வந்த சிலர், அங்கு வைக்கப்பட்டிருந்த கொரோனா விழிப்புணர்வு பொம்மையிடம் ஊரடங்கை மீறி வெளியில் வந்ததற்கு மன்னிப்பு கேட்டு செல்லும் நிலை ஏற்பட்டது
புளியந்தோப்பில் கும்பலாக சீட்டாடி சிக்கிய சூதாட்டக்காரர்களை, சுற்றி வளைத்த காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, சீட்டு அட்டைகளுடன் கையை தூக்கியபடி தெருதெருவாக ஊர்வலமாக அழைத்து வந்து கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினார்
சென்னையில் நாளுக்கு நாள் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக வீட்டுக்குள் அடங்கி இருப்போம், கொரோனா பரவலை தடுப்போம்..!
Comments