அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 3,332 பேர் உயிரிழப்பு

0 6574
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3332 பேர் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து, அமெரிக்காவில் இறப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3332 பேர் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து, அமெரிக்காவில்  இறப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

புதிதாக 27 ஆயீரம் பேருக்கு தொற்று பரவியதை தொடர்ந்து கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையும் 8 லட்சத்து 69 ஆயீரமாக உயர்ந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கம் காரணமாக அமெரிக்க தொழிலாளர்களில் 6 ல் ஒருவர் வேலையிழந்து விட்டதாகவும்,கடந்த 5 வாரங்களில் இரண்டு கோடியே 60 லட்சம் அமெரிக்கர்களுக்கு வேலை போய் விட்டதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா பரிசோதனைகள் நடத்துவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால், தொற்று எண்ணிக்கை இப்போது கிடைத்துள்ள புள்ளி விவரங்களை விடவும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments