உச்சம் எட்டிய அச்சம் உயரும் கொரோனா பாதிப்பு

0 4593
ஒரே நாளில் ஆயிரத்து 684 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், இந்தியாவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 452ஆக உயர்ந்துள்ளது. கொரோனா, உயிரிழப்பு 723ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் ஆயிரத்து 684 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், இந்தியாவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 452ஆக உயர்ந்துள்ளது. கொரோனா, உயிரிழப்பு 723ஆக உயர்ந்துள்ளது.

கண்ணுக்கு தெரியாத கொரோனா கிருமியால், நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக் கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

மஹாராஷ்டிராவில் ஆயிரத்து 430 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு மட்டும் 283 பேர் பலியாகி உள்ளனர். டெல்லியை பொறுத்தவரை, 2 ஆயிரத்து 376 பேர் பாதிக்கப்பட, உயிரிழப்பு அரை சதத்தை எட்டி விட்டது.

குஜராத்தில் கொரோனா பாதிப்பு, 2 ஆயிரத்து 624 ஆக உயர்ந்துள்ளது. அங்கு உயிரிழப்பு 112 ஐ எட்டி விட்டது.

ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு, 2 ஆயிரத்தை தொட, உயிரிழப்பு 27 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஆயிரத்து 699 பேரும், உத்தரபிரதேசத்தில் ஆயிரத்து 510 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தெலங்கானாவில் கொரோனா பாதிப்பு, ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அங்கு, உயிரிழப்பு, கால் சதத்தை தொட்டு விட்டது.

ஆந்திராவில், பாதிப்பு 955 ஆக அதிகரிக்க, பலி எண்ணிக்கை 29 ஆக அதிகரித்தது.

மேற்கு வங்காளத்தில் 514 பேர் பாதிக்கப்பட, அங்கு உயிரிழப்பு 15 ஆக உயர்ந்தது.

கேரளாவில் கொரோனா பாதிப்பு 463 ஆகவும், கர்நாடகாவில் 445 ஆகவும் உயர்ந்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 427 ஆக அதிகரித்துள்ளது.

பஞ்சாப்பில் 283 ஆகவும், ஹரியானாவில் 272 ஆகவும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர, பீஹாரில் பாதிப்பு, 200 ஐ தொடும் நிலையில் உள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 452 ஆக உயர்ந்தது. பலி எண்ணிக்கை 723 ஆக அதிகரித்தது.

இதனிடையே, கடந்த 28 நாட்களில், 15 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எதுவும் நிகழவில்லை.

கடந்த 14 நாட்களை பொறுத்தவரை, கொரோனா பாதிப்பு நிகழாத மாவட்டங்களின் எண்ணிக்கை, 80 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு, குணம் அடைவோரின் எண்ணிக்கை 20 புள்ளி 57 சதவீதமாக அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments