மும்பையில் கொரோனா தொற்றுள்ளோரின் தொடர்புகளைக் கண்டறிதல், சோதனை செய்தல், தனிமைப் படுத்துதல் நடவடிக்கைகளில் மாநகராட்சி தீவிரம்
மும்பையில் அதிக அளவு தொடர்புகளைக் கண்டறிதல், சோதனை செய்தல், தனிமைப்படுத்தல் ஆகியவை தீவிரமாக நடைபெறுவதே கொரோனா பாதிப்பு அதிக எண்ணிக்கையில் கண்டறியப்பட்டதற்குக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளி காலை நிலவரப்படி மும்பையில் நாலாயிரத்து 205 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 167 பேர் உயிரிழந்தனர். அதிலும் வியாழனன்று ஒரே நாளில் 522 பேர் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
தொற்றுள்ளோரின் தொடர்புகளைக் கண்டறிதல், சோதனை செய்தல், அதிகப் பாதிப்புள்ளோரைக் கண்டு தனிமைப் படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருவதே இதற்குக் காரணம் என மாநகராட்சி துணை நலவாழ்வு அலுவலர் தக்சா ஷா தெரிவித்துள்ளார்.
மும்பையில் 813 கட்டுப்பாட்டு மண்டலங்களிலும் விமான நிலையத்திலும் சேர்த்து ஏப்ரல் 23 வரை 4 லட்சம் பேர் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Comments