"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
ஊரடங்கு காலத்திற்குப் பிறகும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கும் நோக்கில் பழைய கார்களுக்கு டிமாண்ட்
ஊரடங்கு காலகட்டத்திற்கு பிறகு, ஓரளவு பண வசதி உள்ளவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் நோக்கில், மக்கள் நெருக்கம் அதிகமான பொது போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தமாட்டார்கள் என்பதால் ,பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான டிமான்ட் அதிகரிக்கும் என, அந்த துறையைச் சார்ந்தவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
பொருளாதார நிலை சீரவடைதற்கு நீண்ட காலம் எடுக்கும் என கூறப்படும் நிலையில், பலர் கையில் இருக்கும் பணத்தை வைத்து புதிய கார்களை வாங்க வாய்ப்பில்லை என கருதப்படுகிறது.
கால் டாக்சிகளின் சுகாதாரம் குறித்த நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாகும் என்பதால், பலர் பயன்படுத்தப்பட்ட கார்களை தேடி வரும் நிலைமை ஏற்படும் என மாருதி சுஸுகி, ஹுண்டாய், மஹிந்திரா, டொயோட்டா உள்ளிட்ட நிறுவனங்களின் பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை துணை நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.
Comments