கொரோனா தொற்றிலிருந்து செல்களை நிகோடின் பாதுகாக்குமா? பிரான்சில் புதிய ஆராய்ச்சி
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து செல்களை நிகோடின் பாதுகாக்குமா என ஃபிரான்சில் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.
பாரீஸில் உள்ள மருத்துவமனை ஒன்று, கொரோனா நோயாளிகளை பரிசோதித்ததில், புகை பிடிக்கும் பழக்கம் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்துள்ளது. செல் ஏற்பிகளில் படிந்துள்ள நிக்கோட்டின், செல்களுக்கு வைரஸ் நுழைவதை தடுக்கக் கூடுமா என்ற அடிப்படையில் தற்போது விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதை பரிசோதித்துப் பார்ப்பதற்காக பிரான்ஸ் அரசிடம் விஞ்ஞானிகள் அனுமதி கேட்டுள்ளனர்.
வைரஸ் தொற்று ஏற்படும்போது, நோய் எதிர்ப்பு மண்டலம் மிகவிரைவாக செயல்படும். அப்போது, உடலில் உருவாகும் மிதமிஞ்சிய எதிர்வினை (cytokine storms) கொரோனா நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தி, உயிரிழப்புக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்க நிக்கோட்டின் உதவுமா என்ற கோணத்தில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்த உள்ளனர். இது ஆராய்ச்சிக்கான விஷயம் மட்டுமே என்றும், புகைபிடிப்பதும் அதனால் நிகோட்டின் படிவதும் தீங்கு விளைவிக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
Comments