அமெரிக்காவில் இருந்து 6 அதிவிரைவு கொரோனா சோதனை எந்திரங்களை இறக்குமதி செய்கிறது இந்தியா
கொரோனா சோதனையை விரைவுபடுத்த 6 அதிவிரைவுச் சோதனை எந்திரங்களை அமெரிக்காவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்ய உள்ளது.
அமெரிக்காவின் ரோச் நிறுவனத்திடம் இருந்து 6 அதிவிரைவுச் சோதனை எந்திரங்களை இந்தியா வாங்க உள்ளதாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் சிறீவாஸ்தவா தெரிவித்துள்ளார். இந்த எந்திரங்கள் மூலம் ஆறாயிரம் முதல் எட்டாயிரம் சோதனைகள் வரை ஒரே நேரத்தில் செய்ய முடியும்.
உள்நாட்டிலேயே தேவை அதிகமிருக்கும் நிலையிலும் இந்தியாவுக்கு இவற்றை ஏற்றுமதி செய்ய டிரம்ப் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. சீனாவில் இருந்து கடந்த இரு வாரங்களில் 24 விமானங்களில் 400 டன் மருத்துவக் கருவிகள், வெப்பமானிகள், முகக்கவசங்கள், உடல்காப்புக் கவசங்கள் ஆகியன இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், வரும் நாட்களில் மேலும் 20 விமானங்களில் பொருட்கள் வரவுள்ளதாகவும் அனுராக் சிறிவாஸ்தவா தெரிவித்தார்.
Comments