சூரிய ஒளி கொரோனா வைரசை விரைந்து அழிக்கிறது - அமெரிக்க விஞ்ஞானிகள்

0 28480

சூரிய ஒளி கொரோனா வைரசை விரைந்து அழிப்பதாக, அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த, உள்நாட்டுப் பதுகாப்புத் துறை அறிவியல் ஆலோசகர் வில்லியம் பிரையன் (William Bryan), பரப்புகளில் படிந்துள்ள வைரஸ்களையும், காற்றில் உள்ள வைரஸ்களையும் சூரிய ஒளி அழித்துவிடும் திறன் பெற்றது என்று குறிப்பிட்டார். சூரிய ஒளியின் புறஊதாக் கதிர்கள், வைரஸ்களின் மரபணுப் பொருள்களை சேதப்படுத்தி, அவை பல்கிப் பெருகும் திறனை முடக்கிவிடும்.

எனவே வெப்பம் மற்றும் ஈரப்பதம் அல்லது இரண்டுமே அதிகரிப்பது வைரசுக்கு உகந்தது அல்ல என்றும் வில்லியம் பிரையன் தெரிவித்தார். தேசிய உயிரிபாதுகாப்பு ஆய்வு மையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் இந்த முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த ஆய்வறிக்கை இன்னும் வெளியிடப்பட்டு, வேறு பிற விஞ்ஞானிகளால் இன்னும் வெளிமதிப்பீடு செய்யப்படவில்லை. சூரிய ஒளி, வெப்பம், ஈரப்பதம் ஆகியவை கொரோனா வைரஸ் அழிப்பை விரைவுபடுத்தும் என்றாலும், வரும் கோடை காலத்தில் வைரஸ் முற்றாக அழிந்துவிடும் என நினைத்து தற்காப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைவிட்டு விடக் கூடாது என்று அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments