குடும்ப அட்டைகளுக்கு மே 2, 3 தேதிகளில் டோக்கன் விநியோகம்
குடும்ப அட்டைதாரர்களுக்கு அடுத்த மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் வழங்க மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
குடும்ப அட்டைகளுக்கு ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு எப்போதும் போல அரிசி ஆகியவை விலையின்றி இம்மாதம் வழங்கப்பட்டது. அதேபோன்று மே மாதம் வழங்க இன்றும், நாளையும் அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மே 2 மற்றும் 3ம் தேதிகளில் டோக்கன் வழங்கப்படுவதாகவும், 4ந் தேதி முதல் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் எனவும் தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Comments