தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1683 ஆக உயர்வு

0 5020

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 683ஆக அதிகரித்துள்ளது.

தமிழக அரசின் நலவாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இதுவரை தமிழகத்தில் உள்ள 34 ஆய்வகங்களில் 65 ஆயிரத்து 977 மாதிரிகள் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. மொத்தம் ஆயிரத்து 683 பேருக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ஒரேநாளில் புதிதாக 54 பேருக்குக் கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.

சோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் 56 ஆயிரத்து 836 மாதிரிகளில் கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. சந்தேகத்துக்குள்ளான ஆயிரத்து 787 பேர் தனிமை வார்டுகளில் கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா பாதிப்புக்குச் சிகிச்சை பெற்று, மேலும் 90 பேர் குணமடைந்துள்ளதால் இதுவரை 752 பேர் நோய் தொற்றில் இருந்து மீண்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 908 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை மேலும் 2 பேர் பலியானதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டங்களைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக சென்னையில் மேலும் 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளளதால் மொத்த எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் மேலும் 5 பேரும், நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 4 பேரும், திண்டுக்கலில் 3 பேரும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 110 பேரும், கோவையில் 134 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுளளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 37 மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் உள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் இன்னும் கொரோனாவின் பிடியில் சிக்காமல் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments