மத்திய அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்தது மத்திய அரசு

0 14687

இந்த வருடம் ஜனவரி 1 முதல் முன்தேதியிட்டு அறிவிக்கப்பட்ட மத்திய அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்களுக்கான 4 சதவிகித அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சுமார் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 60 லட்சம் ஓய்வூதியர்களுக்கு 4 சதவிகித அகவிலைப்படி உயர்வை அளிப்பது என்று கடந்த மாதம் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதனால் தற்போதுள்ள 17சதவிகித அகவிலைப்படி 21 சதவிகிதமாக உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், அடுத்த ஆண்டு ஜூலை வரை, இந்த உயர்வையும், தொடர்ந்துள்ள அகவிலைப்படி உயர்வுகளையும் நிறுத்தி வைத்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

4 சதவிகித அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசுக்கு மாதந்தோறும் கூடுதலாக சுமார் 1000 கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டிருந்தது. இப்போது 14 மாதங்கள் தள்ளிப்போவதால் அதன் வாயிலாக சேமிக்கப்படும் சுமார் 14500 கோடி ரூபாய் கொரோனா நிவாரணப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments