100 நாள் வேலைத்திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி
தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு அனுமதி அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே பணியில் ஈடுபட வேண்டும் என்றும் பணியில் ஈடுபடுவோர் தனிமனித இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரக பகுதிகளில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள், சாலை, குடிநீர்,மேம்பாலம், மின் துறை சார்ந்த பணிகள், மருத்துவக்கல்லூரி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளலாம் எனவும், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 33 விழுக்காடு ஊழியர்கள் மிகாமல் கொண்டு இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Comments