ஓடி ஓடி ஒளியணும்... ட்ரோனுக்கு கண்ணாமூச்சி காட்டும் காளையர்கள்

0 7689

வேலூர் மாவட்ட போலீசாரின் ட்ரோன் கேமராவுக்கு போக்குகாட்டிய உள்ளூர் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் ஓட்டம் எடுத்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

வேலூர் மாவட்ட காவல் துறையினரும் ட்ரோன் கேமராவும் கையுமாக ஊர் சுற்றுபவர்களை விரட்ட தொடங்கி விட்டனர். கையில் மட்டையுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த உள்ளூர் ஆட்டக்காரர்கள் பெவிலியனை நோக்கி ஓடினர்

இரு ஆட்டக்காரர்கள் மட்டும் கையில் மட்டையுடன் தங்களது மெல்லிய தேகத்தை வாலிபால் கம்பத்தில் மறைக்க முயன்றனர். தரலெவலுக்கு இறங்கி கலங்கடித்த ட்ரோனால் அங்கிருந்து ஓடி அருகில் நின்ற இரு சக்கரவாகனம் அருகே பதுங்கினர் இந்த பாயும் புலிகள்..!

இன்னோரு பக்கம் ட்ரோன் கேமராவுக்கு பயந்து ஓடிய உள்ளூர் ஆட்டக்காரர்கள் சிலர் வேகமாக ஓடி சுவர் ஏறி குதிக்க இயலாமல் இடுக்கிற்க்குள் சிக்கிக் கொண்டனர் இருந்தாலும் ட்ரோன் கேகராவுக்கு பயந்து முட்டி மோதி தலை தெறிக்க ஓடியது அந்த கும்பல்

புதுக்கோட்டையில் தண்ணீர் தொட்டி தேடிவந்த கன்னுகுட்டிகளை தல தெறிக்க வீடுதேடி ஓட வைத்தனர் திருவிடைமருதூர் போலீசார் பறக்கவிட்ட ட்ரோன் கேமரா, அங்குள்ள ஆட்டக்காரர்களை அலண்டு ஓடவிட்டது

விழித்திரு... விலகி இரு... வீட்டில் இரு என்பதை ட்ரோன் கேமராவை வைத்து அழுத்தி சொல்லி வருகின்றனர் காவல்துறையினர்..!

தனித்திருப்போம்! கொரோனா பரவுதலை தவிர்ப்போம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments