வடகொரியா தலைநகரில் உணவுப் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக தகவல்
வடகொரிய தலைநகர் பியோங்யாங்கில் பொதுமக்கள் அதிகளவில் உணவுப் பொருட்களை வாங்கி பதுக்கி வைத்தால் அங்காடிகள் அனைத்தும் காலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவில் கொரோனா அச்சுறுத்தல் தலைதூக்கியவுடனே அண்டைநாடான வடகொரியா தனது எல்லைகள் அனைத்தையும் மூடியது. அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரம் சரிவர தெரியாத நிலையில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சில செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா பரவலை தடுப்பதற்கான கடும் கட்டுப்பாடுகள் அல்லது வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை கவலைக்கிடம் என்ற தகவல்கள், உணவு பதுக்கலுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளன.
Comments