வட இந்தியாவில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் காற்று மாசு குறைந்துள்ளதாக அமெரிக்காவின் நாசா தகவல்

0 4309

ஊரடங்கு கடைப்பிடிப்பதால் வட இந்தியாவில் இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் காற்று மாசு குறைந்துள்ளதாக அமெரிக்காவின் நாசா தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மே 25 முதல் மே 3 வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. வாகனங்கள் ஓடாததாலும், ஆலைகள் இயங்காததாலும் காற்று மாசடைவது முற்றிலும் குறைந்துள்ளது. இதனால் கங்கைச் சமவெளிப் பகுதியில் காற்றில் கலந்துள்ள தூசியின் அளவு இருபது ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளதாக அமெரிக்க விண்வெளி அமைப்பு நாசாவின் அறிவியலாளர் பவன் குப்தா தெரிவித்துள்ளார். மார்ச் 27ஆம் தேதி வட இந்தியாவின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்ததும் காற்றில் தூசியின் அளவு குறைந்ததற்கு ஒரு காரணமாகும் எனவும் பவன் குப்தா தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments