வாரணாசியில் இருந்து முதன்முறையாக லண்டனுக்கு 4 டன் அளவிலான பச்சை காய்கறிகள் ஏற்றுமதி

0 10940

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து முதன்முறையாக லண்டனுக்கு 4 டன் அளவிலான பச்சை காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

பச்சை மிளகாய், வெள்ளரிக்காய், சுரைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் குளிரூட்டப்பட்ட கண்டெய்னர்கள் மூலம் செவ்வாய்க்கிழமை மாலை டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து சரக்கு விமானம் மூலம் அந்த காய்கறிகள் வியாழக்கிழமை மாலை லண்டன் சென்றடைய உள்ளன. இதற்கு முன்பு வாரணாசியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு மட்டுமே காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த நகர்வு ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கால் கவலை அடைந்திருந்த விவசாயிகளுக்கு இந்த நகர்வு நம்பிக்கையளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments