கொரோனா ஒழிப்பில் பிரதமர் மோடி கையாளும் விதத்தை உலக நாடுகள் பாராட்டுகின்றன - உள்துறை அமைச்சர் அமித் ஷா

0 4518

கொரோனா ஒழிப்பை பிரதமர் மோடி கையாளும் விதத்தை அனைத்து உலக நாடுகளும் பாராட்டுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி இருக்கிறார்.

தமது டுவிட்டர் பதிவில், கொரோனாவில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பதிலும், இந்த சவாலான நேரத்தில் உலக மக்களுக்கு மோடி உதவியாக இருப்பதும் போற்றுதலுக்குரியது என அமித் ஷா நெகிழ்ந்துள்ளார்.

ஒவ்வொரு இந்தியரும் மோடியின் தலைமையில் நம்பிக்கை வைத்து அவரது கரங்களில் பாதுகாப்பை உணர்வதாகவும் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றை கையாளுவதில் மத்திய அரசு தோல்வியுற்றுவிட்டதாவும், பலருக்கு வேலை பறி போய்விட்டதாகவும் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா வெளியிட்ட டுவிட்டர் பதிவுக்கு பதிலடி அளிக்கும் வகையில் அமித் ஷா இந்த பதிவை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments