நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் சிறப்பு திட்டத்தை துவங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

0 6582

தமிழ்நாட்டில் பொதுமக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் நலத்தை பேணவும் ஆரோக்கியம் எனவும் புதிய சிறப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

 கொரோனா பரவலை தடுப்பது உள்ளிட்டவற்றுக்கு பரிந்துரைகளை அளிக்க 11 மருத்துவர்கள் கொண்ட வல்லுநர் குழுவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைத்திருந்தார். அக்குழுவினர் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ முறைகளில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிமுறைகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக ஆரோக்கியம் என்ற சிறப்பு திட்டம் மூலம் வழிமுறைகளை வெளியிட பரிந்துரை அளித்திருந்தனர். அதன்படி, சென்னையிலுள்ள தலைமை செயலகத்தில் அந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். பின்னர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல்நலம் பேணுவதற்கும் நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர் சூரணப் பொட்டலங்களை முதலமைச்சர் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments