சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தைச் சேர்ந்த 84 பேருக்கு கொரோனா தொற்று

0 1457
சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தைச் சேர்ந்த 84 பேர், கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தைச் சேர்ந்த 84 பேர், கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் கொரோனா தொற்றால் மொத்தம் 261 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,  8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 103 பேர் குணம் பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

மண்டல வாரியாக ராயபுரத்தைச் சேர்ந்த 84 பேருக்கும் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த 41 பேருக்கும் தேனாம்பேட்டையைச் சேர்ந்த 37 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், திரு.வி.க.நகரைச் சேர்ந்த 25 பேரும் அண்ணாநகரைச் சேர்ந்த 21 பேரும் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த 20 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாதவரம் மண்டலத்தில் ஒருவருக்கு கூட நோய் தொற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments