குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மனைவி முகக்கவசங்கள் தைத்து வருகிறார்

0 3227
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மனைவி சவீதா தையல் எந்திரத்தின் மூலம் முகக்கவசங்களைத் தைத்து வருகிறார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மனைவி சவீதா தையல் எந்திரத்தின் மூலம் முகக்கவசங்களைத் தைத்து வருகிறார்.

கொரோனா தொற்று பரவலைத் தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என உலக நலவாழ்வு அமைப்பும், மத்திய மாநில அரசுகளும் வலியுறுத்தி வருகின்றன. வீட்டைவிட்டு வெளியே வருவோர் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டின் முதல் பெண்ணான சவீதா கோவிந்த் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள சக்தி காட் என்னுமிடத்தில் தையல் எந்திரத்தின் உதவியுடன் முகக்கவசங்களைத் தயாரித்து வருகிறார்.

இந்த முகக்கவசங்கள், டெல்லியில் உள்ள வீடற்றோருக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments