இந்தியாவில் கொரோனா பாதிப்பு 21 ஆயிரத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதிலும், கொரோனா நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது. நேற்று இரவு 652ஆக கொரோனா பலி எண்ணிக்கை இருந்த நிலையில், மேலும் 29 பேர் நோய் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.
இதனால் நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 681ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல் நேற்று இரவு 20 ஆயிரத்து 471ஆக கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று காலை மேலும் 922 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 393ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், குஜராத் 2ம் இடத்திலும், டெல்லி 3ம் இடத்திலும் உள்ளன.
மகாராஷ்டிராவில் இதுவரை 5 ஆயிரத்து 652 பேருக்கும், குஜராத்தில் 2 ஆயிரத்து 407 பேருக்கும், டெல்லியில் 2 ஆயிரத்து 248 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
உயிரிழப்பை அதிகம் சந்தித்த மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் இதுவரை 269 பேர் பலியாகியுள்ளனர். 2ம் இடத்திலுள்ள குஜராத்தில் 103 பேரும், 3ம் இடத்திலுள்ள மத்திய பிரதேசத்தில் 80 பேரும் உயிரிழந்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவ சிகிச்சைக்குபிறகு, கொரோனாவில் இருந்து 4 ஆயிரத்து 258 பேர் குணமடைந்துள்ளனர். இதுதவிர்த்து 16 ஆயிரத்து 454 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments