ஓடுங்க ஓடுங்க அது வருது ..! அலறி அடித்து ஓடிய இளைஞர்கள்

0 12238
புதுக்கோட்டை மற்றும் திருவிடைமருதூரில் ட்ரோன் கேமராவை கண்டு விளையாட்டுப் பிள்ளைகள் சிதறி ஓடிய காட்சிகள் வெளியாகி உள்ளன.

புதுக்கோட்டை மற்றும் திருவிடைமருதூரில் ட்ரோன் கேமராவை கண்டு விளையாட்டுப் பிள்ளைகள் சிதறி ஓடிய காட்சிகள் வெளியாகி உள்ளன.

கடந்த சில தினங்கள் முன்பு வரை கொரோனா நோய்த் தொற்று இல்லாத மாவட்டமாக இருந்த புதுக்கோட்டைக்கும் கொரோனா பரவிய நிலையில், அங்குள்ள காவல்துறையினர் விழிப்புணர்வு இன்றி சுற்றிய இளைஞர்களை ட்ரோன் கேமரா உதவியுடன் விரட்டி வருகின்றனர்

தண்ணீர் தொட்டி தேடிவந்து கும்பலாக படுத்துக்கிடந்த வருத்தப்படாத வாலிபர்களை அவரவர் வீடு தேடி மிரண்டு ஓட விட்டது போலீசாரின் ட்ரோன் கேமரா.

தெருவில் கும்பலாக சுற்றிய சிறுவர்களும், ஊர்சுற்றி இளைஞர்களும், போர்காலத்தில் குண்டு போடும் விமானத்துக்கு பயந்து ஓடுவது போல தெறித்து ஓடினர்.

கால்பந்து விளையாடிய இளைஞர்கள் அதனை கைப்பந்தாக எடுத்துக் கொண்டு பிடித்த ஓட்டம் சுவரை தாண்டியது.

அதே போல திருவிடைமருதூர் காவல்துறையினர் ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட சில நிமிடங்களில் கிரிக்கெட் விளையாடிய புள்ளைங்க எல்லாம் பெவிலியனை தாண்டி ஓடத்தொடங்கினர்.

அடுத்த பகுதியில் கைப்பந்து விளையாடிய காளையர்கள் காடுதாண்டி ஓட்டமெடுத்தனர். கெத்தாக நின்றவர்கள் கூட ட்ரோன் கேமரா தங்களை நோக்குகிறது என்பதை அறிந்ததும் பின்னங்கால் பிடறியில்பட அங்கிருந்து ஓட்டம் எடுத்தனர்

எல்லா இடங்களுக்கும் போலீசாரே சென்று அவர்களை விரட்டினால் கால நேர விரயம், என்பதால் ட்ரோன் கேமரா மூலம் கும்பலை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள தமிழக காவல்துறையினர் மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைக்கு கைமேல் பலன் இருப்பதை கண்கூடாக பார்க்க முடிகின்றது.

மக்கள் நலனுக்காக காவல்துறையினர் சொல்வதை கேட்டு வீட்டிற்குள் அடங்காமல் வீதியில் கூடி வம்பு வழக்குகளை வாங்கி கட்டிக் கொள்ள வேண்டாம் என்பதே காவல்துறையின் எச்சரிக்கையாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments