தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கியிருப்பது தன்னாட்சி உரிமைக்கு எதிரானது
மத்திய வரிகளில் தமிழகத்திற்கு குறைவான தொகை ஒதுக்கியிருப்பது நிதி தன்னாட்சி உரிமைக்கு எதிரானது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய வரி வருவாய் தொகுப்புக்கு தமிழகமோ - தென்னிந்திய மாநிலங்களோ அளிக்கும் பங்களிப்பிற்கு ஏற்ற நிதிப் பகிர்வை 15-ஆவது நிதிக்குழு பரிந்துரைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வரிகளில் தமிழகத்துக்கு 1928 கோடியே 56 லட்சம் ரூபாய் மட்டுமே மத்திய அரசு நிதி ஒதுக்கியிருப்பது வேதனையளிப்பதாகவும், இது மாநிலத்தின் நிதி தன்னாட்சி உரிமைக்கும், கூட்டாட்சித் தத்துவத்துக்கும் எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நிதி உரிமையை மீட்டெடுக்க, மத்திய அரசை வலியுறுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பை முதலமைச்சருக்கு வழங்க திமுக எம்பி.க்கள் தயாராக இருப்பதாக ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Comments