ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று... விமான போக்குவரத்து அமைச்சக தலைமையகம் சீல்

0 5343

ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து டெல்லி ஜோர் பாக் ராஜீவ் காந்தி பவனில் இயங்கும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் சீல் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆம் தேதி வரை அலுவலகத்திற்கு வந்த ஊழியர் ஒருவருக்கு தொற்று ஏற்படிருப்பது நேற்று கண்டுபிடிக்கப்பட்டதால் பாதுகாப்பு விதிகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விமானப்போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட ஊழியருடன் தொடர்பில் இருந்த அனைத்து சக ஊழியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமையில் இருக்கும்படி விமானப் போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments