கர்ப்பிணி பெண்களுக்கு அறிகுறி இல்லையென்றாலும் கொரோனா பரிசோதனை - ICMR
கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா அறிகுறி இல்லையென்றாலும், பிரசவத்துக்கு முன்பு பரிசோதனை கட்டாயம் நடத்தப்பட வேண்டுமென்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
கொரோனா பரிசோதனை குறித்த புதிய வழிகாட்டுதல்களை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் சாதாரண பகுதியில் வசிக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும், தனிமைபடுத்தப்பட்ட பகுதிகள், வெளிமாநில தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் தங்கியுள்ள இடங்கள், நிவாரண முகாம்கள் ஆகியவற்றில் தங்கியிருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா அறிகுறி இல்லாதபோதிலும், பிரசவத்துக்கு 5 நாள்கள் முன்னதாக சோதனை நடத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பெண்களிடம் பரிசோதனை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பிரசவ இடத்தில் செய்திருக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments