நெட்பிளிக்ஸ்-ன் வாடிக்கையாளர் கடந்த 3 மாதங்களில் 1.75 கோடி உயர்வு

0 5306
ஊரடங்கு எதிரொலி-நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர் பல மடங்கு உயர்வு

கொரோனா ஊரடங்கால் உலகமே வீட்டுக்குள் முடங்கி உள்ளதால் ஆன்லைன் ஒளிபரப்பு நிறுவனமான நெட்பிளிக்ஸ்-ன் (Netflix)வாடிக்கையாளர் எண்ணிக்கை கடந்த 3 மாதங்களில் ஒன்றே முக்கால் கோடி அதிகரித்துள்ளது.

இவர்களையும் சேர்த்து நெட்பிளிக்ஸின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 20 கோடியை நெருங்குகிறது. வீட்டில் முடங்கி உள்ள மக்கள் Tiger King, Love is Blind போன்ற ரியாலிட்டி ஷோக்களில் மூழ்கி நேரத்தை செலவிடுவதாக நெட்பிளிக்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த 3 மாதங்களில் 5,388 கோடி ரூபாய் (709 மில்லியன் டாலர்) வருமானம் வந்துள்ளதாகவும, இது கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம் எனவும் அது கூறியுள்ளது. வரும் 3 மாதங்களில் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் மேலும் 75 லட்சம் அதிகரிக்கும் என்று கூறியுள்ள நெட்பிளிக்ஸின் ஒட்டுமொத்த வருமானம் 28 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments