69 சதவீதம் பேருக்கு கொரோனா அறிகுறியே தெரியவில்லை - ICMR
கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 69 சதவீதம் பேருக்கு அதற்கான அறிகுறியே தெரியவில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதுவரை சுமார் நான்கு லட்சத்துக்கும் அதிகமானோரிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்ப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் தலைவர் டாக்டர் கங்கா கேத்கர் 31 சதவீதம் பேருக்கு மட்டும் தான் அறிகுறிகள் தெளிவாகத் தெரிந்தன. மற்ற 69 பேருக்கு அறிகுறிகளே தெரியாமல்தான் இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
Comments