30-40 ஆண்டுகளாக பலகோடி ரூபாய் செலவிட்டும் நிகழாத தூய்மை... ஊரடங்கால் சுத்தமான கங்கை நதி
நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக நிகழ்ந்த நன்மைகளில் ஒன்று கங்கை நதி குடிப்பதற்கு ஏற்றதாக மாறியிருப்பது.
ஹரித்துவாரில் கழிவுகள், ஈமச்சடங்குகள் காரணமாக அசுத்தம் அடைந்த புண்ணிய நதியான கங்கை நீண்ட காலத்திற்குப் பிறகு தன்னைத் தானே தூய்மைப்படுத்திக் கொண்டு விட்டது. கோவிட் 19 நோயின் பீதி காரணமாக ஊரடங்குக்கு மக்கள் கட்டுப்பட்டிருப்பதால், ஓடிக்கொண்டேயிருக்கும் ஜீவநதியான கங்கை நதியின் நீர் தூய்மையடைந்து தற்போது குடிப்பதற்கும் ஏற்ற நீரைக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டும் பல ஆண்டுகளாக குப்பை கூளமாக காட்சியளித்த கங்கை தற்போது தூய்மையாகி உள்ளது.
Comments