கொலையில் முடிந்த காதல் பஞ்சாயத்து..! தட்டிக்கேட்டதால் அட்டூழியம்

0 10312
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் காதல் விவகாரத்திற்கு பஞ்சாயத்து பேசிய காதலியின் சகோதரர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் காதல் விவகாரத்திற்கு பஞ்சாயத்து பேசிய காதலியின் சகோதரர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காதலியின் கணவரை குத்தி விட்டு தப்பமுயன்ற காதலன் மண்டை உடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி கலியபெருமாள் வீதியை சேர்ந்தவர் கோபி, இவரது மனைவி கவுசல்யா, கடந்த வருடம் இருவருக்கும் திருமணம் நடந்த நிலையில் கவுசல்யா திருமணத்திற்கு முன்பு காதலித்து வந்த ராமச்சந்திரன் என்பவர் உடன் தொடர்ந்து பழக்கத்தில் இருந்துள்ளார்.

இது அறிந்த கணவர் கோபி, கவுசல்யாவின் சகோதரர் கவுதமிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தனது சகோதரியின் வாழ்க்கை வீணாய்போன காதலால் கெட்டுவிடக்கூடாது என்று ராமச்சந்திரனை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் கவுதம்.

ராமச்சந்திரன் தனது ஆதரவாளர்களான ரவிச்சந்திரன், பூவராகவன், மனோஜ் ஆகியோரை அழைத்து சென்றுள்ளான்.

பேச்சுவார்த்தையின் போது கவுசல்யாவின் சகோதரர் கவுதமும், கணவர் கோபியும் காதலை கைவிட ராமச்சந்திரனை வற்புறுத்தி உள்ளனர்.

ஆனால் கவுசல்யாவை சந்தித்தது முதல் காதல் கொண்டது வரை தான் சீனியர் என்பதால் காதலை கைவிட மறுத்து வாக்குவாதம் செய்துள்ளார் ராமச்சந்திரன்.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பான நிலையில் ராமச்சந்திரன் ஆதரவாளர்களுடன் காதலியின் சகோதரரையும் கணவரையும் கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்றுள்ளான்.

அவர்கள் பதிலுக்கு கல்லால் தாக்கியதில் காதலன் ராமச்சந்திரன் மற்றும் மனோஜின் மண்டை உடைந்தது.

கத்திகுத்தில் காயம் அடைந்த கவுதம் மருத்துவமனை செல்லும் வழியில் பரிதாபமாக பலியானார்.

கவுசல்யாவின் கணவர் கோபி பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தப்பிஓடிய ரவிச்சந்திரன் பூவராகவனை காவல்துரையினர் தேடி வருகின்றனர்.

திருமணத்திற்கு பின்னரும் கவுசல்யா தனது விபரீத பருவ காதலை தொடர்ந்ததால், காதலில் சீனியர் என்று சட்டம் பேசிய முன்னாள் காதலன் ராமச்சந்திரன் மண்டை உடைந்து மருத்துவமனையில் படுத்திருக்க, தாலி கட்டிய கணவன் கத்தி குத்து காயத்துடன் உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தங்கையின் வாழ்வுக்காக சகோதரர் தன்னுடைய உயிரையே விலையாக கொடுக்கும் விபரீதம் அரங்கேறி இருக்கின்றது.

திருமணத்திற்கு பின்னர் கணவன் இருக்க சம்பந்தப்பட்ட பெண் வேறு நபரை காதலித்தால் குடும்பத்தில் என்ன மாதிரியான விபரீதங்கள் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments