ஒடிசாவில் கொரோனா தடுப்பு பணியின்போது மருத்துவ பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் ரூ.50 லட்சம் நிதி
ஒடிசாவில் கொரோனா தடுப்பு பணியின்போது மருத்துவ பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50 லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்படும், உயிரிழந்தோரின் சடலங்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிசடங்கு நடத்தப்படும் என முதமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய அவர், மருத்துவ பணியாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ, அவர்களின் பணியை அவமதிக்கும் வகையிலோ யாரேனும் செயல்பட்டால், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். கொரோனா தடுப்பு பணியின்போது மருத்துவ பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால், அவர்கள் தியாகிகளாக கருதப்பட்டு, அரசு மரியாதையுடன் சடலங்களுக்கு இறுதி சடங்கு நடத்தப்படும் என கூறியுள்ளார். அவர்களின் ஈடு இணையற்ற தியாகத்தை கெளரவிக்கும் வகையில், விருதுகள் அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Comments