முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.160.93 கோடி நன்கொடை

0 4362
கொரோனா தடுப்பு, நிவாரண பணிகளுக்கு பல்வேறு தரப்பினரும் நன்கொடை ))

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 160 கோடியே 93 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலான தொகை நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 13ம் தேதி வரை 134 கோடி ரூபாய்க்கும் கூடுதலான தொகை அளிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை மேலும் பலரால் 26 கோடியே 30 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 10 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலாக நன்கொடை அளித்தோர் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் அதிகபட்சமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் 5 கோடி ரூபாயும், சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் நிறுவனம் 3 கோடி ரூபாயும், ஐடிசி எஜுகேசன் நிறுவனம் 2 கோடி ரூபாயும் அளித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments